/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண் மருத்துவ பிரிவு இணை செயலராக ஆரோக்கியா மருத்துவமனை நிறுவனர் தேர்வு

ADDED : டிச 22, 2025 05:50 AM
சேலம்: இந்திய மருத்துவ சங்கத்தின், 80ம் ஆண்டு, மாநில அளவிலான மருத்துவ மாநாடு, காரைக்குடி அபிராமி பேலஸில் நடந்தது.
அதில் சங்கத்தின், 2026ம் ஆண்டுக்கு, தமிழ்நாடு மாநில, பெண் மருத்துவ பிரிவு இணை செயலராக, சேலம் ஆரோக்கியா மருத்து-வமனை நிறுவன தலைவர், தலைமை மகப்பேறு மருத்துவர் ராணி வரதராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டார்.மகளிர் சுகாதாரம், மருத்துவ சேவை, பெண் மருத்துவர்களின் மேம்பாட்டில் அவரது அர்ப்பணிப்புடன் கூடிய ஆற்றலை பாராட்டி, இப்பதவி வழங்கப்பட்டது. அந்த மாநாட்டில், 'மரியா-தைக்குரிய மகப்பேறு சேவை' தலைப்பில், மருத்துவர் ராணி வர-தராஜூ பேசினார். இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் ஸ்ரீதர், தேசிய முன்னாள் துணைத்தலைவர் பிரகாசம், மாநிலம் முழுதும் இருந்து நிர்வாகிகள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.