ADDED : டிச 26, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: காடையாம்பட்டி, கொங்குபட்டி அருகே நல்லுாரை சேர்ந்த, விவ-சாயி வஜ்ரவேல், 63. இவர் ஆடுகளை வளர்க்கிறார். நேற்று முன்-தினம் இரவு, வீடு அருகே உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்தி-ருந்தார். நேற்று காலை பார்த்தபோது, மர்ம விலங்கு கடித்து, ஒரு வெள்ளாடு, 5 செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தன.
ஒரு கன்றுக்குட்டி காயம் அடைந்திருந்தது. இதுகுறித்து வஜ்ரவேல் தகவல்படி, டேனிஷ்பேட்டை வனத்துறை-யினர், ஆய்வு செய்தனர். அப்போது நாய்கள் கடித்ததில் ஆடுகள் இறந்ததாக, வனத்
துறையினர் தெரிவித்தனர்.

