/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
பெற்றோரை வெட்டி கொன்ற மகனுக்கு 'இரட்டை ஆயுள்'
/
பெற்றோரை வெட்டி கொன்ற மகனுக்கு 'இரட்டை ஆயுள்'
ADDED : செப் 11, 2025 03:43 AM
திமிரி:திமிரி அருகே பெற்றோரை வெட்டி கொன்ற மகனுக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
ரா ணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த மோசூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி வசந்தா. இவர்களது மகன்கள் முரளிதரன், 35, ஞானபிரகாசம், 32. முரளிதரன், தன் பெற்றோரிடம் சொத்தை பிரித்து தரக்கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
வழக்கம் போல, 2014 மார்ச், 10ம் தேதி இரவு, நிலத்தை பிரித்து தரக்கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது முரளிதரன், தன் பெற்றோரை அரிவாளால் வெட்டி கொன்றார். திமிரி போலீசார் அவரை கைது செய்தனர்.
இது குறித்த வழக்கு, ராணிப்பேட்டை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், குற்றவாளி முரளிதரனுக்கு, இரட்டை ஆயுள், 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.