/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி
/
சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி
ADDED : செப் 13, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜா:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை சேர்ந்தவர் செந்தில்நாதன், 44; பி.எஸ்.சி., பட்டதாரி. இவர், தன் வீட்டில் டியூஷன் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு தன்னிடம் டியூஷன் படித்த பிளஸ் 1 மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வாலாஜா போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் திடீரென செந்தில்நாதன் தலைமறைவானார். திருச்செந்துாரில் சாமியார் வேடத்தில் திரிந்த அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.