/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊரக வேலை உறுதி திட்டப்பணிக்கு பி.டி.ஓ., நியமனம் செய்ய வலியுறுத்தல்
/
ஊரக வேலை உறுதி திட்டப்பணிக்கு பி.டி.ஓ., நியமனம் செய்ய வலியுறுத்தல்
ஊரக வேலை உறுதி திட்டப்பணிக்கு பி.டி.ஓ., நியமனம் செய்ய வலியுறுத்தல்
ஊரக வேலை உறுதி திட்டப்பணிக்கு பி.டி.ஓ., நியமனம் செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜன 01, 2026 05:24 AM
ராமநாதபுரம்: மத்திய அரசு வி.பி.ஜி ராம்ஜி என்ற 125 நாட்கள் புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
இப்பணியை கண்காணிக்க பி.டி.ஓ., நிலையில் தனி பணியிடம் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் விஜயகுமார் ராமநாதபுரத்தில் கூறியதாவது:
சென்னையில் ஊரக வளர்ச்சித் துறை, ஊராட்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியை ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் ரமேஷ், துணைத்தலைவர்கள் செல்வகுமார், சார்லஸ், சங்கர் மற்றும் நான் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தியுள்ளோம்.
குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு பெயரை மாற்றி 125 நாட்களாக அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் முறைகேடுகளை தவிர்க்கவும், அனைவரும் பயன்பெறும் வகையில் பணிகளை கண்காணிக்க பி.டி.ஓ., நிலையிலான பணியிடம் உருவாக்கி அவரது தலைமையில் ஊழியர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும்.
ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, நயினார் கோவில் ஊராட்சிகளில் அதிக ஊராட்சிகளை பிரித்து ஆனந்துாரை புதிய ஊராட்சி ஒன்றியமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

