/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா
/
அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா
ADDED : மார் 02, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள பிடாரிசேரி கிராமம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா நடந்தது.
தலைமை ஆசிரியை இளமுருகு பொற்செல்வி தலைமை வகித்தார். ஆசிரியர் முரளிதரன் முன்னிலை வகித்தார். மீனாம்பிகை வரவேற்றார்.விழாவில் கவிஞர் கல்லுாரணி முத்துமுருகன், ஆசிரியர் சுதந்திர சக்தி உள்ளிட்டோர் தமிழ் கூடல் பற்றி மாணவர்கள் மத்தியில் பேசினர். மாணவர்கள் பாரதியார், திருவள்ளுவர், ஔவை பாட்டி வேடங்களில் வந்திருந்தனர். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர்கள் மாரியம்மாள், விஜயன், கண்ணன், மாணவர்கள் பங்கேற்றனர்.

