/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாலையை மூடிய மணல்; வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையை மூடிய மணல்; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 11, 2025 10:32 PM

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பாதி ரோட்டை மணல் மூடியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
ராமநாதபுரம் --ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் பல ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் பட்டணம் காத்தான், பாரதிநகர் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை சாலை முழுவதும் மணல் திட்டுக்களாக காணப்படுகின்றன.
இதனால் சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
வாகன ஓட்டிகள் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில மணல் நிரம்பி உள்ளதால் டூவீலர் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படுகிறது.
கனரக வாகனங்கள் செல்லும் போது கிளம்பும் துாசியால் பின்னால் வரும் சிறிய வாகனங்களின் டிரைவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சாலையின் ஓரம் தேங்கி காணப்படும் மணல் மேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.