/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாடியிலிருந்து தவறி விழுந்த சுமைதுாக்கும் தொழிலாளி பலி
/
மாடியிலிருந்து தவறி விழுந்த சுமைதுாக்கும் தொழிலாளி பலி
மாடியிலிருந்து தவறி விழுந்த சுமைதுாக்கும் தொழிலாளி பலி
மாடியிலிருந்து தவறி விழுந்த சுமைதுாக்கும் தொழிலாளி பலி
ADDED : செப் 11, 2025 07:09 AM

தொண்டி : தொண்டியில் 2 மாடி கட்டடத்தின் மாடியிலிருந்து தவறி விழுந்த சுமைதுாக்கும் தொழிலாளி பலியானார். தொண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஹைதர்அலி 39. சுமை துாக்கும் தொழிலாளி. அப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் ரேஷன் கடை உள்ளது.
2 மாடி கொண்ட அந்த கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு ஹைதர்அலி கீழே விழுந்தார். அவரது உடல் ரேஷன் கடை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிடந்தது.
அதிகாலையில் அந்தப் பக்கமாக சென்ற சிலர் உடல் கிடப்பதை பார்த்து போலீசுக்கு தெரிவித்தனர். இறப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் சந்தேகம் தெரிவித்ததால் ராமநாதபுரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் பழைய பஸ்ஸ்டாண்ட் வரை சென்று மீண்டும் வந்து மாடிக்கு ஏறியது.
அதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் ைஹதர்அலி மாடியிலிருந்து கீழே விழுவது தெரிந்தது. தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.