/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நேஷனல் அகாடமி பள்ளி தடகளத்தில் சாதனை
/
நேஷனல் அகாடமி பள்ளி தடகளத்தில் சாதனை
ADDED : ஆக 14, 2025 11:36 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்த மாணவர்களுக்கான குறுவட்ட அளவிலான தடகளப்போட்டியில் ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மாண்டிச்சோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.
இப்பள்ளி மாணவர்கள் 23 தங்கப்பதக்கங்கள், 12 வெண்கல பதக்கங்களை வென்று தொடர்ந்து 2வது முறையாக தடகளப் போட்டியியில் ஓட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர். பிளஸ் 2 மாணவர்கள் ஏ.சாம் விர்ஜில், கே. சுதர்சன் ஆகியோர் 19 வயது பிரிவில் மற்றும் பிளஸ் 1 மாணவர் கே.திருக்குமரன் 17 வயது பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் டாக்டர் செய்யதா அப்துல்லா, கல்வி ஆலோசகர், பள்ளி முதல்வர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.