ADDED : ஆக 15, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்;மாணவர்கள் கலாசாரம், பாரம்பரியம், சுற்றுசூழல் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடப்பாண்டு (2025-26) பசுமை, பாரம்பரியம் தலைப்பில் கலைத்திருவிழா போட்டி நடக்கவுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனித்தனியாக ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் ஆண்டுதோறும் நடக்கிறது. பள்ளி தலைமையாசிரியரை முதன்மை அமைப்பாளராக கொண்டு பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதி அடங்கிய அமைப்புக்குழு உருவாக்கி போட்டிகள் நடக்கிறது. போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் விபரங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
நடப்பாண்டுக்கான போட்டி ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்து வருகின்றனர்.