ADDED : செப் 11, 2025 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம : ராமேஸ்வரம் அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவர்களிடையே விளையாட்டு விழா போட்டி நடந்தது.
ராமேஸ்வரம் அருகே உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் கடந்த இரு நாட்களாக மாணவர்களுக்கு விளையாட்டு விழா போட்டி நடந்தது. இப்போட்டியை ராமேஸ்வரம், ராமநாதபுரம் அமிர்தா பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமியம்மா துவக்கி வைத்தார். தடகள போட்டிகள், வில்வித்தை, கராத்தே, சிலம்பம், ஸ்கேட்டிங் பயிற்சியுடன் கூடிய நடனம் ஆகிய போட்டிகள் நடந்தது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ், கோப்பைகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி., மீரா, இந்திய கடற்படை பைலட் ஹரீஸ் சைதன்யா, பள்ளி முதல்வர் கோகிலா, துணை முதல்வர் தீரஜ் லட்சுமணபாரதி, பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர்.