/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அழகப்பா பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள்
/
அழகப்பா பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள்
அழகப்பா பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள்
அழகப்பா பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள்
ADDED : செப் 11, 2025 05:11 AM

கீழக்கரை : கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் அழகப்பா பல்கலை உறுப்பு கல்லுாரிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தது.
இதில் 12 கல்லுாரிகளை சேர்ந்த அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இத்தொடரில் முதல் இடத்தை பல்கலை அணியும், இரண்டாம் இடத்தை தேவகோட்டை சேவகன் அண்ணாமலை கலைக்கல்லுாரி அணியும், மூன்றாமிடத்தை முத்துப்பேட்டை கவுசானல் கல்லுாரி அணியும் வென்றன.
பரிசளிப்பு விழாவில் அழகப்பா பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் ரவி பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுக்கோப்பைகளை வழங்கினார். அழகப்பா பல்கலை ஆட்சி குழு உறுப்பினர் பேராசிரியர் ஜெயகாந்தன், செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் தவசிலிங்கம் செய்திருந்தார்.