/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எம்.டி எம்.ஏ. போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது
/
எம்.டி எம்.ஏ. போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது
ADDED : செப் 12, 2025 07:37 AM
கூடலுார்; கூடலுார் காசிம்வயல் பகுதியில், விலை உயர்ந்த போதை பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கூடலூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத், எஸ்.ஐ., கவியரசு மற்றும் போலீசார் நேற்று, மாலை காசிம்வயல் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் சந்தேகத்துக் குரிய இருவரை, போலீசார் பிடித்து சோதனை செய்தபோது, அவர்கள் விற்பனைக்காக, 6 கிராம் எம்.டி எம்.ஏ. போதைப் பொருள் வைத்திருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் காசிம்வயல் பகுதியை சேர்ந்த சத்யராஜ், 26, விக்னேஷ், 25, என்பதும், இவர்கள் கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து எம்.டி எம்.ஏ., போதை பொருளை கடத்தி வந்து, விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு, 30 ஆயிரம் ரூபாயாகும்.