/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் செயற்கை இழை மைதானம் அவசியம்; இந்திய ஹாக்கி அணி காணொளி பகுத்தாய்வாளர் வலியுறுத்தல்
/
நீலகிரியில் செயற்கை இழை மைதானம் அவசியம்; இந்திய ஹாக்கி அணி காணொளி பகுத்தாய்வாளர் வலியுறுத்தல்
நீலகிரியில் செயற்கை இழை மைதானம் அவசியம்; இந்திய ஹாக்கி அணி காணொளி பகுத்தாய்வாளர் வலியுறுத்தல்
நீலகிரியில் செயற்கை இழை மைதானம் அவசியம்; இந்திய ஹாக்கி அணி காணொளி பகுத்தாய்வாளர் வலியுறுத்தல்
ADDED : டிச 22, 2025 05:41 AM

குன்னுார்: சென்னையில் நடந்த, உலக ஜூனியர் ஹாக்கி போட்டியில், இந்திய அணியுடன் பங்கேற்று பணியாற்றிய காணொளி பகுத்தாய்வாளருக்கு குன்னுாரில் பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.
குன்னுார் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் 'ஹாக்கி நீலகிரிஸ்' அமைப்பு சார்பில், மாநில போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார். 2016 முதல் இந்தியா ஹாக்கி அணிக்கான காணொளி பகுத்தாய்வாளராக (வீடியோ அனலிஸ்ட்) பணியாற்றி வருகிறார்.
கடந்த நவ. 28 முதல் டிச.10 வரை சென்னையில் நடந்த உலக ஜூனியர் கோப்பைக்கான ஹாக்கி போட்டியில், வெண்களம் வென்ற இந்திய அணிக்கு 'வீடியோ' அனலிஸ்ட்டாக பணியாற்றினார். இவருக்கு நேற்று குன்னுாரில், ஹாக்கி நீலகிரிஸ் அமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அசோக் கூறுகையில்,''வெண்களம் வென்ற இந்திய அணியில் பயிற்சி அலுவலர்களுடன் காணொளி பகுத்தாய்வாளராக பணியாற்றினேன். 2016க்கு பிறகு உலக ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெண்கலம் பெற்றுள்ளோம்.
அரை இறுதியில் அர்ஜென்டினா அணியுடன், 2-0 என்ற கோல் கணக்கில் இருந்தோம். அதில், கடைசி நிமிடங்களில் பெனால்டிக் கார்னர்ஸ்க்கு, பயிற்சியாளர்கள் சீதேஷ், வீரேந்திர லக்ரா ஆகியோரின் ஆலோசனைகளுடன் எனது தொழில்நுட்ப ஆதார வழிகாட்டி உதவிகள் அளிக்கப்பட்டது.
நீலகிரியில் ஹாக்கி விளையாட்டில் அனைவரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் செயற்கை இழை மைதானம் அமைத்து நீலகிரிக்கு பெருமை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார். ஹாக்கி நீலகிரிஸ் அமைப்பு தலைவர் அனந்தகிருஷ்ணன், துணைத் தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராஜா உட்பட நிர்வாகிகள் ஹாக்கி வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

