/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாயார் ஆற்றில் கலங்கி வரும் குடிநீர்; வன விலங்குகள்; மக்களுக்கு பாதிப்பு
/
மாயார் ஆற்றில் கலங்கி வரும் குடிநீர்; வன விலங்குகள்; மக்களுக்கு பாதிப்பு
மாயார் ஆற்றில் கலங்கி வரும் குடிநீர்; வன விலங்குகள்; மக்களுக்கு பாதிப்பு
மாயார் ஆற்றில் கலங்கி வரும் குடிநீர்; வன விலங்குகள்; மக்களுக்கு பாதிப்பு
ADDED : டிச 22, 2025 05:39 AM

கூடலுார்: ஊட்டி அருகே, கிளன்மார்கன் அணையில், பராமரிப்புக்காக தண்ணீர் திறந்து விட்ட நிலையில், முதுமலை மாயாறு ஆற்று நீர் கலங்கி வருவதால், அப்பகுதியினர் மற்றும் வன விலங்குகளுக்கு குடிநீருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி கிளன்மார்க்கன் அணை, பராமரிப்பு பணிக்காக, 10 நாட்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த சில நாட்களாக அணையிலிருந்து வெளியேறும் கலங்கிய நீர் முதுமலை மாயாறு ஆற்றில் கலந்து செல்கிறது.
இதனால், ஆற்று நீரை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்த முடியாமல் பழங்கு டி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வனவிலங்குகளும், கலங்கிய நீரை குடிக்க முடியாமல், சிரமப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'மாயாறு ஆறு வன விலங்குகளுக்கு மட்டுமின்றி முதுமலையில் வசிக்க கூடிய பழங்குடி மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகும். முன்னறிவிப்பு இன்றி அணை திறக்கப்பட்டதால் மாயாறு ஆற்று நீர் கலங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால், சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
குந்தா மின் உற்பத்தி நிலைய மேற்பார்வை பொறியாளர் சேகர் கூறுகையில், ''கிளன்மார்கன் அணை பராமரிப்பு பணிகள், 40 நாட்கள் நடக்கிறது. இதற்காக, 10 நாட்களாக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதில், சில நாட்கள் கலங்கிய நீர் வெளியேறி உள்ளது. ஓரிரு நாட்களில் சீராகிவிடும். பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றபின் அணையில் தண்ணீர் நிரப்பப்படும்,'' என்றார்.

