/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இளநிலை பட்டப்படிப்பு 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்
/
இளநிலை பட்டப்படிப்பு 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 07, 2024 11:31 PM
ஊட்டி:'ஊட்டி அரசு கலை கல்லுாரியில், இளநிலை பட்டப்படிப்பு பயில இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்,' என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு கலை கல்லுாரி முதல்வர் ராமலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ஊட்டி அரசு கலை கல்லுாரியில், 2024-25ம் கல்வியாண்டில், இளநிலை பட்டப்படிப்புகளுக்கு, பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள்,www.tngasa.in என்ற இணைய முகவரியில், இம்மாதம், 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும் பொருட்டு, கல்லுாரியில், 'மாணவர்கள் சேர்க்கை உதவி மையம்,' அமைக்கப்பட்டுள்ளது. மாணவ மற்றும் மாணவியர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், மையத்தை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

