/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லாரி சக்கரத்தில் சிக்கி கட்டட தொழிலாளி பலி
/
லாரி சக்கரத்தில் சிக்கி கட்டட தொழிலாளி பலி
ADDED : செப் 14, 2025 04:47 AM
நாமக்கல்: நாமக்கல் அடுத்த நவணி பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சங்கர், 45; இவரது நண்பர் முருகேசன், 49; கட்டட தொழிலாளிகளான இரு-வரும், நேற்று மாலை, 7:30 மணிக்கு,
நாமக்கல்லில் பணியை முடித்துவிட்டு, சொந்த ஊருக்கு மொபட்டில் சென்றனர்.மொபட்டை முருகேசன் ஓட்டிச்செல்ல, சங்கர் பின்னால் அமர்ந்தி-ருந்தார். நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை கருங்கல்பா-ளையம் பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி, மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், லாரி டயரில் சிக்கிய சங்கர், சம்பவ இடத்தி-லேயே பரிதாபமாக உயிரிழந்தார். முருகேசன் லேசான காயங்க-ளுடன் உயிர் தப்பினார். சம்பவம் தொடர்பாக, நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.