/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
12 பி.டி.ஓ.,க்கள் ஒரே நாளில் இடமாற்றம்: கலெக்டர் உத்தரவு
/
12 பி.டி.ஓ.,க்கள் ஒரே நாளில் இடமாற்றம்: கலெக்டர் உத்தரவு
12 பி.டி.ஓ.,க்கள் ஒரே நாளில் இடமாற்றம்: கலெக்டர் உத்தரவு
12 பி.டி.ஓ.,க்கள் ஒரே நாளில் இடமாற்றம்: கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 14, 2025 04:48 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், பி.டி.ஓ., நிலையில் பணியாற்றி வரும், 12 பேரை இட-மாற்றம் செய்து, கலெக்டர் துர்காமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிப்பாளையத்தில், சமீபத்தில் கடத்தல் விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட பி.டி.ஓ., (கி.ஊ.,) பிரபாகரின் காலி பணியிடத்திற்கு, திருச்செங்கோடு பி.டி.ஓ., சுரேஷ் நியமிக்கப்பட்-டுள்ளார். அதேபோல், பள்ளிப்பாளையம் பி.டி.ஓ., கிரிஜா, நாமக்கல் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலத்திற்கு இட-மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு, ஏற்கனவே பணியாற்றி வந்த நீலா, எலச்சிபாளையத்திற்கும், எலச்சிபாளையம் பி.டி.ஓ., பிரகாஷ், நாமக்கல் இணையதள பிரிவுக்கும், இங்கு பணியாற்-றிய சரவணன், மல்லசமுத்திரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்-டனர்.மேலும், சேந்தமங்கலம் பி.டி.ஓ., சுந்தரம், புதுச்சத்திரத்திற்கும் (கி.ஊ.,), அங்கு பணியாற்றிய முத்துலட்சுமி, சேந்தமங்கலத்-திற்கும், நாமக்கல் பி.டி.ஓ., (கி.ஊ.,) இளங்கோவன், நாமக்கல் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்திற்கும், அங்கு பணியாற்றி வந்த சுகிதா, நாமக்கல் பி.டி.ஓ.,வாகவும் (கி.ஊ.,) இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நாமக்கல் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் சிறு-சேமிப்பு பிரிவில் பணியாற்றி வந்த அருளப்பன், திருச்செங்கோட்-டிற்கும், மல்லசமுத்திரம் பி.டி.ஓ., (கி.ஊ.,) பாலவிநாயகம், எலச்சிபாளையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். அங்கு பணியாற்றி வந்த லோகமணிகண்டன், பள்ளிப்பாளையம் பி.டி.ஓ.,வாகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.