/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடிநீர் குழாயில் உடைப்பு வீணாக பாய்ந்தோடும் குடிநீர்
/
குடிநீர் குழாயில் உடைப்பு வீணாக பாய்ந்தோடும் குடிநீர்
குடிநீர் குழாயில் உடைப்பு வீணாக பாய்ந்தோடும் குடிநீர்
குடிநீர் குழாயில் உடைப்பு வீணாக பாய்ந்தோடும் குடிநீர்
ADDED : மே 02, 2025 01:25 AM
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை யூனியன், பச்சுடையாம்பாளையம் கிராமத்திற்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் அனைத்து பகுதிக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கான பிரதான குழாய்கள் சாலையோரம் பதிக்கப்பட்டுள்ளது.
கடந்த, இரண்டு தினங்களுக்கு முன், நாமகிரிப்பேட்டையில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் உயரமான மின் கம்பங்கள் நடும் பணி நடந்தது. அப்போது, சாலையோரம் இருந்த பிரதான கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
தற்போது, தண்ணீர் திறந்துவிடும் நிலையில், ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால், கடந்த, இரண்டு நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதால் தண்ணீர் பிரச்னை நகர் பகுதியில் அதிகரித்து வருகிறது.
எனவே, கிராமத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்படும் முன், குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

