/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
1.93 லட்சம் வாக்காளர் நீக்கம் கூடுதல் ஆவணங்கள் சரிபார்ப்பு
/
1.93 லட்சம் வாக்காளர் நீக்கம் கூடுதல் ஆவணங்கள் சரிபார்ப்பு
1.93 லட்சம் வாக்காளர் நீக்கம் கூடுதல் ஆவணங்கள் சரிபார்ப்பு
1.93 லட்சம் வாக்காளர் நீக்கம் கூடுதல் ஆவணங்கள் சரிபார்ப்பு
ADDED : டிச 23, 2025 05:45 AM
ராசிபுரம்; நாமக்கல் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து, 1.93 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் கூடுதல் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி, கடந்த மாதம் நடந்-தது. இதனடிப்படையில், சமீபத்தில் வெளியான பட்டியலில் மாநிலம் முழுவதும், 97 லட்சம் வாக்-காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். நாமக்கல் மாவட்-டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய, 6 சட்டசபை தொகுதி-களில், மொத்தம், 1,93,706 வாக்காளர்கள் நீக்கப்பட்-டுள்ளனர். இதில் இறந்தவர்கள், 66,312 பேர், குடி-பெயர்ந்தவர்கள், 1,00,201 பேர், இருமுறை பதிவு செய்தவர்கள், 8,636 பேர் மற்றும் இதர காரணங்க-ளுக்காக, 534 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக, ஆவணங்கள் சரியில்லை மற்றும் கண்டறிய இயலாதவர்கள் என்ற அடிப்படையில் பலரின் பெயர் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவர்களது பெயர்களை மீண்டும் பரிசீலிக்க, கூடுதல் ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன. இதை-யடுத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மீண்டும் வீடு வீடாக சென்று ஆவணங்களை சரி-பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சிகளை சேர்ந்த பூத் ஏஜன்ட்கள் மூலமும் இப்-பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் ஆவணங்கள் மட்டுமின்றி, பெற்றோர் அல்லது வீட்டில் உள்ள மற்றவர்களின் ஆவணங்களையும் அலுவலர்கள் நேரடியாக சென்று கேட்டுப்பெற்று வருகின்றனர்.

