/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க ரூ.2.95 கோடிl டெண்டர் விடும் பணியை வனத்துறை தொடங்குமா
/
குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க ரூ.2.95 கோடிl டெண்டர் விடும் பணியை வனத்துறை தொடங்குமா
குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க ரூ.2.95 கோடிl டெண்டர் விடும் பணியை வனத்துறை தொடங்குமா
குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க ரூ.2.95 கோடிl டெண்டர் விடும் பணியை வனத்துறை தொடங்குமா
ADDED : செப் 11, 2025 05:04 AM

ஆண்டில் ஒன்பது மாதங்கள் தண்ணீர் கொட்டும் குட்லாடம்பட்டி அருவி 2018ல் வீசிய கஜா புயலால் உருக்குலைந்தது. அருவியில் நின்று குளிக்கும் பகுதி, கைப்பிடி, நடைபாதை, கழிப்பறை, உடைமாற்றும் அறைகள் அனைத்தும் பாறை விழுந்ததால் சேத மடைந்தன. அருவியை யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
ஏழாண்டுகளாக பட்ஜெட் விவாதம், மானியக் கோரிக்கையின் போது அருவியை சீரமைக்க வேண்டுமென சுற்றுலாத்துறை, வனத்துறை சார்பில் திட்டமதிப்பீடு தயாரிக்கப் பட்டு அனுப்பப்பட்டது. அருவி வனத்துறை கட்டுப் பாட்டில் இருப்பதால் அவ்வப்போது திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படு வதும் செலவு அதிகம் என கிடப்பில் போடப்படு வதும் தொடர்ந்தது. கடந்தாண்டு ரூ.6 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு முடங்கியது.
இந்நிலையில் 2024 - 25ம் ஆண்டு சட்டசபை மானிய கோரிக்கையின் போது குட்லாடம்பட்டி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ.10.20 கோடி ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டது. தற்போது வனத்துறை மூலம் ரூ.2.95 கோடிக்கு பொதுப்பணித்துறையால் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக திட்டப் பொறி யாளரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டது.
சுற்றுலா இயக்குநரின் கருத்துரு அமைச்சருக்கு அனுப்பப்பட்ட நிலையில் ரூ.2.93 கோடிக்கு நிர்வாக அனுமதியும் நிதியும் வழங்கி ஆணையிடப் பட்டுள்ளது.
இதையடுத்து குட் லாடம்பட்டி அருவிப் பகுதியில் வனத்துறை மூலம் சுற்றுலா வளர்ச்சிப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதில் ஏற்கனவே இருந்த நடைபாதை சீரமைப்புக்கு ரூ.51.34 லட்சம், அருவியின் இணைப்புப் பகுதி சீரமைக்க ரூ.23.91 லட்சம், பாதுகாப்பு வேலிக்கு ரூ.18.6 லட்சம், முகப்பு பகுதிக்கு ரூ.38.32, பார்க்கிங் பகுதிக்கு ரூ.32.24 லட்சம், குழந்தைகள் பூங்கா பகுதிக்கு ரூ.52.74 லட்சம், அறிவிப்பு பலகைகள் அமைக்க ரூ.8 லட்சம், வனத்துறை பராமரிப்புக்கு ரூ.6.79 லட்சம் என பயன்படுத்தப்பட உள்ளது.
தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என் பதால் ஜனவரி வரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். எனவே வனத்துறை தாமதம் செய்யாமல் டெண்டர் விடும் பணிகளை விரைந்து துவங்க வேண்டும். இரண்டு மாதத்திற்குள் டெண்டர் பணி முடிந்து விட்டால் அருவிக்குச் செல்லும் பாதையில் இருந்து வேலைகளை தொடங்க முடியும்.
அடுத்த ஜூனில் இருந்து மதுரை மக்களின் குட் லாடம்பட்டி அருவி கனவு நனவாகி விடும்.