ADDED : டிச 15, 2025 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை ஒய்.புதுப்பட்டி தனியார் பொறியியல் கல்லுாரி மாற்றுத்திறன் மாணவி சந்தியா. துபாயில் நடந்த ஆசியன் யூத் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்று பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை பெற்றோர், பயிற்சியாளர் ரஞ்சித், நண்பர்கள் வரவேற்றனர்.
சந்தியா கூறியதாவது: தங்கப்பதக்கம் வென்றது எல்லையில்லா மகிழ்ச்சி. இது எனக்கு பெருமையான தருணம். தங்கப் பதக்கத்தை பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். போட்டியின் போது எனக்கு பல்வேறு அழுத்தங்கள் இருந்தன. அப்படி இருந்தும் மன உறுதியுடன் விளையாடி சாதனை புரிந்தது மகிழ்ச்சி. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, பயிற்சியாளர் ரஞ்சித் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

