/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டிச.27, 28ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நடக்கிறது
/
டிச.27, 28ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நடக்கிறது
டிச.27, 28ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நடக்கிறது
டிச.27, 28ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நடக்கிறது
ADDED : டிச 25, 2025 06:22 AM
மதுரை: 'வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய டிச.27, 28ல் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது' என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் முடிவடைந்து மதுரை மாவட்டத்தின் 10 சட்டசபை தொகுதிக்குமான வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19 ல் வெளியிடப்பட்டது.
பெறப்பட்ட படிவங்களில் ஒப்பீடு பெறாத வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்காது. இதுகுறித்து தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரால் நோட்டீஸ் அனுப்பி, விசாரணை மேற்கொள்வர். ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க வேண்டியவர்கள் படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம், முகவரி, போட்டோ மாற்றம் செய்ய படிவம் 8 ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
இப்படிவத்துடன் பின்வரும் ஆவணங்களில் ஒன்றை இணைத்து அளிக்க வேண்டும்.
ஓய்வூதிய ஆணை, மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவன ஓய்வூதியதாரர்கள், தபால், எல்.ஐ.சி., பொதுத்துறை நிறுவனம், அரசு, உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய ஆவணங்கள், பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், மாநில அரசு வழங்கிய நிரந்தர குடியிருப்பு சான்று, வனஉரிமை சான்று, இதர பிற்பட்ட வகுப்பு சான்று, அட்டவணை வகுப்பு சான்று, தேசிய பதிவேட்டு ஆவணம், மாநில அரசு, உள்ளூர் குழுமம் தயார்செய்த குடும்ப பதிவேடு, நிலம், வீடு ஒதுக்கீடு செய்த அரசு சான்று, ஆதார் அட்டை நகல் போன்வற்றில் ஏதேனும் ஒன்றை வழங்கலாம்.
மேலும் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் டிச.27,28 ல் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன.
இம்முகாம்களில் பூர்த்தி செய்த படிவங்களை வழங்கலாம். 2026, ஜன.18 வரை அனைத்து வேலைநாளிலும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலகங்களில் நேரடியாக அளிக்கலாம்.
மேலும் voters.eci.gov.in அல்லது voter helpline app என்ற இணைய முகவரி மூலமும் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

