/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 25, 2025 06:22 AM

மதுரை: ''மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பெயரை மாற்றி, திட்டத்தை ரத்து செய்யும் நோக்கத்துடன் செயல்படுவதாக கூறி மத்திய அரசையும், அவர்களுக்கு துணைபோகும் அ.தி.மு.க.,வையும் கண்டித்து, மதுரை மாவட்டத்தில் 14 இடங்களில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை முனிச்சாலை சந்திப்பில் நகர் செயலாளர் தளபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் பொன் முத்துராமலிங்கம், வேலுசாமி, ம.தி.மு.க., எம்.எல்.ஏ., பூமிநாதன், காங்., நகர் தலைவர் கார்த்திகேயன் பங்கேற்றனர். மதுரை தெற்கு தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அலங்காநல்லுார் எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், முத்தையன் முன்னிலை வகித்தனர். காங்., வழக்கறிஞர் நித்திய பிரியா, வட்டாரத் தலைவர்கள் சுப்பாராயலு, காந்திஜி, வி.சி.க., செயலாளர் சிந்தனை வளவன், ம.தி.மு.க., செயலாளர் மார்நாடு, கம்யூனிஸ்ட் கட்சியினர், தி.மு.க., நிர்வாகிகள் விஜயகுமார், சந்தன கருப்பு, தவசதீஷ் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி நகர்செயலாளர் தங்கப்பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் அஜித்பாண்டி, முருகன், பழனி, கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
மேலுார் நகர் தலைவர் முகமது யாசின் தலைமை வகித்தார். எம்.பி., வெங்கடேசன், மாநில கட்டுப்பாட்டு குழு காளிதாஸ், தாலுகா செயலாளர் கண்ணன் பங்கேற்றனர்.
சோழவந்தான் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பாலராஜேந்திரன், பசும்பொன்மாறன், பொதுக்குழு உறுப்பினர் கிரி, நகர்செயலாளர் சத்யபிரகாஷ், சேர்மன்கள் பால்பாண்டியன், ஜெயராமன், காங்., நகர் தலைவர் முருகானந்தன், தொகுதி பொறுப்பாளர் ராமன், மார்சிஸ்ட் மாநில குழு உறுப்பினர் செல்லக்கண்ணு, மாவட்ட குழு உறுப்பினர் வேல்பாண்டி, இ. கம்யூ., விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ஜோதி ராமலிங்கம், மாவட்டத் துணைச் செயலாளர் மாரியப்பன் பங்கேற்றனர்.

