நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறையில் முதுகலை மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.
துறைத் தலைவர் காந்திதுரை தலைமை வகித்து, 'காண்பன யாவுமாய்' சிறுகதைத் தொகுப்பு நுாலை அறிமுகம் செய்தார். முதுகலை மாணவர் கார்த்திக் வரவேற்றார். முதுகலை மாணவி பிரியதர்ஷினி 'கடல்புரத்தில் - மீனவர்களின் வாழ்வியல்' எனும் தலைப்பில் கட்டுரை வாசித்தார்.
முதுகலை மாணவி கவிபாரதி 'பெண்களின் அவலங்கள்' எனும் தலைப்பில் கட்டுரை வாசித்தார். முதுகலை மாணவி மு.நாகஜோதிகா தொகுத்து வழங்கினார். உதவிப்பேராசிரியர்கள் உமாமகேஸ்வரி, .சங்கீத்ராதா ஏற்பாடு செய்தனர்.மாணவர் சங்கரபாண்டி நன்றி கூறினார்.

