/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இலவச வீட்டுமனைக்கு ஏங்கும் மக்கள்
/
இலவச வீட்டுமனைக்கு ஏங்கும் மக்கள்
ADDED : டிச 27, 2025 06:47 AM
மதுரை: மதுரை கருப்பாயூரணி அருகே காளிகாப்பானைச் சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா உத்தரவு பெற்று 6 ஆண்டுகளாகியும் கையில் கிடைக்காததால் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
இப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளியோர் 40 பேருக்கு 2019 ல் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இப்பட்டா உத்தரவு வழங்கி 6 ஆண்டுகளாக இடம் எங்கே என்று கேட்டு வருகின்றனர். ஆனால் பதில் சொல்லத்தான் அதிகாரிகள் யாருமில்லை. அவ்வூரைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் கூறுகையில், ''இலவச பட்டா தரும்போது இது அனுபந்த பட்டா என்று கூறி தந்தனர். இடம் கைக்கு வந்ததும் வீடுகட்டும் கனவில் பலர் மிதந்தனர். ஆனால் இதுவரை அனுபந்த பட்டாவை மாற்றித் தரவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் உங்கள் பட்டா தொடர்பாக கணக்கில் ஏற்றவில்லை என்கின்றனர். சமீபத்தில் இப்பகுதிக்கு வந்த அமைச்சர் மூர்த்தியிடமும் தெரிவித்துவிட்டோம். ஆனால் இடம் கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்பது போல அதிகாரிகள் கூறுகின்றர். எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் வரை சென்று போராடவும் தயாராக உள்ளோம் என்றார்.

