நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை யாதவர் கல்லுாரி கணினி பயன்பாட்டியல் துறை சார்பில், செயற்கை நுண்ணறிவு குறித்து முதல்வர் ராஜூ தலைமையில் கருத்தரங்கு நடந்தது.
பார்க் பிளாசா குழும ஓட்டல்களின் தலைவர் கே.பி.எஸ்.கண்ணன் துவக்கி வைத்தார். மாணவி ஹரிணி வரவேற்றார். டாட் காம் இன்போவே மதுரை நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ், தொழில்துறைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தையும், மாணவர்களுக்கு அது வழங்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் விளக்கினார்.
கல்லுாரி தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், துணை முதல்வர் கிருஷ்ணவேணி, சுயநிதி பாட இயக்குநர் ராஜகோபால், துறைத் தலைவர் நாகராஜன் பேசினர். மாணவர் முத்து கணேஷ் நன்றி கூறினார்.