/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஹாக்கி கோப்பை வென்ற மாணவியருக்கு பாராட்டு
/
ஹாக்கி கோப்பை வென்ற மாணவியருக்கு பாராட்டு
ADDED : செப் 23, 2025 04:32 AM

திருமங்கலம்: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் அமெரிக்கன் கல்லுாரியில் மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி நடந்தது. இதில் 16 அணிகள் பங்கு பெற்றன. கப்பலுார் அரசு கள்ளர் மாணவிகள், முதல் போட்டியில் திருப்பரங்குன்றம் தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வென்றனர்.
இரண்டாவது போட்டியில் எஸ்.பி.ஓ.ஏ., மேல்நிலைப் பள்ளியை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வென்றனர். அரை இறுதி போட்டியில் வாடிப்பட்டி பி அணியை எதிர்த்து 3-0 என்ற கோல் கணக்கில் வென்றனர். இறுதிப் போட்டியில் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றனர். தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் நடந்த போட்டிகளில் 3வது முறையாக முதலமைச்சர் கோப்பையை கப்பலுார் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வென்று ரூ. 54 ஆயிரம் ரொக்க பரிசை பெற்றனர்.
இந்த மாணவியரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் சுபாஷினி, பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் வினோத், பள்ளித் தலைமை ஆசிரியர் பிரபாகர், விளையாட்டு அலுவலர் ராஜா, ஹாக்கி சங்கத் தலைவர் கண்ணன், உடற்கல்வி ஆசிரியர் நல்ல மாயன், ஹாக்கி பயிற்சியாளர் நடராஜன் பாராட்டினர்.