ADDED : செப் 27, 2024 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதித்தது.
நெடுஞ்சாலைத்துறையினர் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.
நேற்று உதவி கோட்ட பொறியாளர் ராதா முத்துக்குமாரி, உதவி பொறியாளர் கவுதம், தாசில்தார் ராமச்சந்திரன், ஆர்.ஐ., கவுதமன் தலைமையில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகள், கட்டடங்கள் அகற்றப்பட்டன.
பல ஆண்டுகளாக அதிகரித்து வந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. ஆக்கிரமிப்புகள் அகற்றியதை தொடர்ந்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது அதிகாரிகள் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோழவந்தான் நகர் வளர்ச்சி இயக்கம் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

