/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சவுராஷ்டிரா மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் மதுரை மாநாட்டில் வலியுறுத்தல்
/
சவுராஷ்டிரா மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் மதுரை மாநாட்டில் வலியுறுத்தல்
சவுராஷ்டிரா மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் மதுரை மாநாட்டில் வலியுறுத்தல்
சவுராஷ்டிரா மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் மதுரை மாநாட்டில் வலியுறுத்தல்
ADDED : டிச 29, 2025 05:25 AM

மதுரை: 'தமிழக அரசியலில் சவுராஷ்டிரா சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் தரவேண்டும்'' என மதுரையில் நடந்த அரசியல் எழுச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் சவுராஷ்டிரா அரசியல் எழுச்சி மாநாடு நேற்று நடந்தது. சவுராஷ்டிரா அரசியல் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கே.ஆர்.எம்., கிஷோர் குமார் தலைமை வகித்தார்.
அவர் பேசுகையில், ''சவுராஷ்டிரா சமூகத்தினருக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும். மொழிவாரி சிறுபான்மையருக்காக அமைக்கும் குழுக்களில் இச்சமூகத்திற்கும் நிரந்தர பொறுப்பு வேண்டும் என்றார்.
தி.மு.க., சார்பில் அமைச்சர் மூர்த்தி ஒரு சமுதாயத்திற்கு முக்கியமானது கல்வி. மதுரையில் சவுராஷ்டிரா கல்லுாரி தொடங்க இடம் தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. நெசவுத்தொழிலுக்கு இலவச 100 யூனிட் மின்சாரம் அறிவித்தவர் முதல்வர் ஸ்டாலின். கைத்தறி பாவு செய்வோருக்கு மழைக் கால பாதிப்புக்காக நிவாரணம் வழங்க முதல்வரிடம் கூறியுள்ளோம். அவர்களுக்கென 'பிரத்யேக செட்' அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ உள்ளன்போடு சவுராஷ்டிரா சமூகத்தினரை வாழ்த்தியவர்கள் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி. இதனை இச்சமூகம் மறக்கக் கூடாது. சவுராஷ்டிரா சமூக மக்களுக்கு பதவி தந்து அழகு பார்த்தது அ.தி.மு.க.
அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா நான் மேயராக இருந்தபோது சவுராஷ்டிரா சமூக கவுன்சிலர்கள் அதிகம். அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி சவுராஷ்டிரா சமூகத்திற்கு பொருளாதாரம், கல்வி, அரசியல் முக்கியத்துவம் கொடுப்பார் என்றார்.
பா.ஜ., மாநில செயலாளர் ராம சீனிவாசன் சவுராஷ்டிரா சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் வாய்ஸ் கொடுத்ததால் தான் தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தலைவராக எம்.ஜி.ஆர்., இருந்தார். சட்டசபைத் தேர்தலில் சவுராஷ்டிரா சமூகத்தவரின் அரசியல் பிரநிதித்துவம் பற்றி கட்சி மேலிடத்தில் பரிந்துரை செய்வேன் என்றார்.
நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழின பிள்ளைகள் வந்தேறி என்ற சொல்லை ஒருபோதும் உச்சரிக்க மாட்டார்கள். சவுராஷ்டிரா மக்கள் எனக்காக நிற்பார்கள் என்பதற்காக நானும் என் தம்பிகளும் இங்கு வரவில்லை. நாங்கள் உங்களோடு நிற்கிறோம் என்பதற்காகவே வந்தோம். அரசியல் பிரநிதித்துவத்திற்காக போராடுபவர்கள் களத்தில் போராடுவன் கூட தான் கைக்கோர்க்க வேண்டும் என்றார்.
சவுராஷ்டிரா அரசியல் ஒருங்கிணைப்புக்குழு மாநாடு சேர்மன் கே.கே.தினேஷ், செயலாளர் பிரசாந்த், மத்திய சபா தலைவர் டி.ஆர். சுரேந்திரன், ஒருங்கிணைப்பாளர்கள் பி.எம்.ராஜ்குமார், எஸ்.கே.ஆர்., ரமேஷ், என்.ஆர்.ஆர். கோபி பங்கேற்றனர்.

