sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

முழுமையான சத்துணவு பெறுவதற்கு மூடிய தட்டுகள் அரசு மருத்துவமனைக்கு நர்ஸ் தாராளம்

/

முழுமையான சத்துணவு பெறுவதற்கு மூடிய தட்டுகள் அரசு மருத்துவமனைக்கு நர்ஸ் தாராளம்

முழுமையான சத்துணவு பெறுவதற்கு மூடிய தட்டுகள் அரசு மருத்துவமனைக்கு நர்ஸ் தாராளம்

முழுமையான சத்துணவு பெறுவதற்கு மூடிய தட்டுகள் அரசு மருத்துவமனைக்கு நர்ஸ் தாராளம்


ADDED : செப் 17, 2025 03:34 AM

Google News

ADDED : செப் 17, 2025 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தோப்பூர் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்காக செவிலிய கண்காணிப்பாளர் (ஓய்வு) ஜெயமணி, மூடியுடன் கூடிய தட்டு, கூட்டு, குழம்பு வைப்பதற்கான பிரத்யேக சில்வர் டப்பாக்களை இலவசமாக வழங்கியுள்ளார்.

தோப்பூர் அரசு மருத்துவமனையில் தொற்றுநோய் பிரத்யேக கட்டடத்தில் 75 படுக்கைகள் உள்ளன. இங்கு நோயாளிகளுக்காக மூன்று வேளையும் இலவசமாக சத்தான உணவு வழங்கப்படுகிறது. நோயாளிகளே தட்டுடன் வந்து உணவைப் பெற்றுச்செல்ல வேண்டும்.

இப்பிரிவில் இருந்து மாறுதலான நர்ஸ் ஜெயமணி, செவிலிய கண்காணிப்பாளராகஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் நோயாளிகளுக்காக ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 'உணவுபெட்டகம்' எனப்படும் சில்வர் தட்டு, டப்பாக்களை வழங்கியுள்ளார். டீன் அருள் சுந்தரேஷ்குமார் அவற்றை நோயாளிகளுக்கு வழங்கினார். டாக்டர்கள் குமரவேல், செல்வராணி, ஜெயகணேஷ், பாரதி கலந்து கொண்டனர்.

இப்பாத்திரங்களை சேகரித்து ஓரிடத்தில் வைத்து சுத்தப்படுத்தி சுடுநீரில் கழுவ ஏற்பாடுகளை தற்போதைய செவிலிய கண்காணிப்பாளர் தனலட்சுமி செய்துள்ளார்.

ஆர்.எம்.ஓ., ஸ்ரீலதா கூறுகையில், ''நோயாளிகளுக்கு உணவு இலவசம் என்றாலும் அவருடன் தங்கும் உறவினர்கள் வெளியில் சாப்பிட அக்கம்பக்கம் ஓட்டல் எதுவும் இல்லை. அவர்களுக்கு இலவச உணவு வழங்குவதை நன்கொடையாளர் மூலம் செய்து வருகிறோம். அரிசி, பருப்பு, காஸ் சிலிண்டர், காய்கறி, கீரை என வெளியில் இருந்தும் மருத்துவமனை பணியாளர்களிடம் இருந்தும் தானமாக பெற்று நோயாளிகளின் உறவினர்களுக்கு உணவளிக்கிறோம் என்றார்.

தானம் செய்ய விரும்பு வோர் இவரை (99947 93321) தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us