/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
19 ஆண்டுகளாக புத்தகத்திருவிழா 'பபாசி' செயலாளர் முருகன் பெருமிதம்
/
19 ஆண்டுகளாக புத்தகத்திருவிழா 'பபாசி' செயலாளர் முருகன் பெருமிதம்
19 ஆண்டுகளாக புத்தகத்திருவிழா 'பபாசி' செயலாளர் முருகன் பெருமிதம்
19 ஆண்டுகளாக புத்தகத்திருவிழா 'பபாசி' செயலாளர் முருகன் பெருமிதம்
ADDED : செப் 12, 2025 04:56 AM

மதுரை: மதுரையில் 19 ஆண்டுகளாக புத்தகத்திருவிழா தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) செயலாளர் முருகன் தெரிவித்தார்.
மதுரை தமுக்கத்தில் மாவட்ட நிர்வாகம், பபாசி, பொது நுாலக இயக்ககம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் செப்.15 வரை புத்தகத் திருவிழா நடக்கிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் வந்து தேவையான புத்தகங்களை எடுத்துச்சென்றுள்ளனர்.
பபாசி செயலாளர் முருகன் கூறியதாவது: கலெக்டராக உதயசந்திரன் இருந்தபோது அவரது முயற்சியால் பபாசி சார்பில் இவ்விழா துவங்கப்பட்டு 19 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்படுகிறது.
மதுரையில் பயிற்சி, உதவி கலெக்டராக இருந்தவர்கள் கலெக்டர்களான பிறகு அவர்களது முயற்சியால் வெளிமாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. மதுரை புத்தகத் திருவிழா குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. உதாரணமாக 10 ஆண்டுகளுக்கு முன் 'புத்தகம் வாங்க... தமுக்கம் வாங்க...' என்ற ஸ்லோகனை மதுரை முழுவதும் கொண்டு சேர்த்தது.
இத்திருவிழாவில் அனைத்து வகையான நுால்களுக்கும் விலையில் 10 சதவீத தள்ளுபடி உண்டு. இளையோர் அலைபேசி பயன்பாட்டை தவிர்த்து, புத்தகம் வாசித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். இவ்வாறு கூறினார்.