நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: பாலமேட்டில் அலங்காநல்லுார் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக தமிழக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மண்டல் தலைவர் முனீஸ்வரி முன்னிலை வகித்தார். 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, செப்.21 திண்டுக்கல் கொடைரோட்டில் நடக்கும் தேர்தலுக்கான பூத் கமிட்டி மாநாடு, பணி, பூத் கமிட்டி வலிமைப்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர் பொன்குமார், துணைத் தலைவர் கோவிந்த மூர்த்தி, ஓ.பி.சி., அணி பொதுச் செயலாளர் கண்ணன், மண்டல் செயலாளர்கள் கஜேந்திரன், சரஸ்வதி, முன்னாள் தலைவர்கள் தங்கதுரை, குமரேசன் பங்கேற்றனர்.