/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீர்வரத்து கால்வாய்களில் மனித கழிவுகள்; மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்

ADDED : செப் 10, 2025 08:19 AM
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் கவிதா தலைமையில் நடந்தது. துணை தாசில்தார் ராஜராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.
விவசாயிகள் மாரிச்சாமி, மகாமுனி, பாண்டியன் உள்ளிட்டோர் பேசியதாவது: மாடக்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாயில் ஏற்குடி, அச்சம்பத்து பகுதியில் வீடுகளின் செப்டிக் டேங்க் கழிவு விடப்படுகிறது. இதனால் நிலங்களில் மனிதக் கழிவுகள் தேங்குகின்றன. விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்படுகிறோம். செப்டிக் டேங்க் கழிவை விடுவோரின் வீட்டின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். 71, 72வது வார்டுகளில் பாதாள சாக்கடை இருந்தும் அப்பகுதியிலுள்ள நீர்வரத்து கால்வாயில் கழிவு நீர் விடப்படுகிறது.
தென்கால் கண்மாய் கரையில் ரோடு அமைக்க கரையில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணின் ஒரு பகுதி கண்மாய்க்குள் கொட்டப்பட்டது. வைகை அணை தண்ணீர் கண்மாய்க்கு வருவதற்குள் அகற்ற வேண்டும். தென்கால் கண்மாயை சுற்றி திருப்பரங்குன்றம் பகுதியில் 13 ஊருணிகள் இருந்தன. தற்போது 4 மட்டுமே உள்ளன. மற்றவற்றை கண்டுபிடிக்க வேண்டும்.
நிலையூர் பெரிய கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலக்குயில்குடி மலையில் உள்ள கற்கள் திருடப்பட்டு வருகின்றன. மானாவாரி கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.