sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பெண்கள், குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கணும் : உயர்நீதிமன்றம் கருத்து

/

 பெண்கள், குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கணும் : உயர்நீதிமன்றம் கருத்து

 பெண்கள், குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கணும் : உயர்நீதிமன்றம் கருத்து

 பெண்கள், குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கணும் : உயர்நீதிமன்றம் கருத்து


ADDED : டிச 23, 2025 07:15 AM

Google News

ADDED : டிச 23, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பெண்கள், குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என தமிழக அரசு, போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் கருப்பசாமிபாண்டியன் 2019 ல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றசம்பவங்கள் நடக்கின்றன. இது கவலை தருகிறது. இவர்களை பாதுகாக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற பெண் நீதிபதி அடங்கிய நிரந்தர குழுஅமைக்கப்பட வேண்டும். அதில் உயரதிகாரிகள், பெண் வழக்கறிஞர்கள், மனநல ஆலோசகர்கள் இடம்பெறச் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது அரசு தரப்பில், பெண்கள் பணிபுரியும் இடத்தில் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை தடுக்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமூகநலத்துறை சார்பில் ஒரு தலைவர், 7 உறுப்பினர் கொண்ட மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு எதிரான குற்றசம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. இதன்மூலம் கணிசமான அளவில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்து கொண்டு, இந்த நடவடிக்கை போதுமானதாக இருக்கிறது. பாதுகாப்பு செயல்பாட்டு வழிமுறைகள் தெளிவாக உள்ளன. இதனை பள்ளிகள், பிறஇடங்களில் பயன்படுத்தலாம். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக இயற்றிய சட்டங்களை அமல்படுத்த அனைத்து தரப்பினருடன் இணைந்து செயல்பட மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துகிறோம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.






      Dinamalar
      Follow us