sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கிடப்பில் போடப்பட்டதா தமிழக முதல்வரின் அறிவிப்பு: ஜி.ஓ., வெளியிட்டும் புதிய உணவு கட்டணம் கிடைக்கல... அரசு விடுதி காப்பாளர்கள் குமுறல்

/

கிடப்பில் போடப்பட்டதா தமிழக முதல்வரின் அறிவிப்பு: ஜி.ஓ., வெளியிட்டும் புதிய உணவு கட்டணம் கிடைக்கல... அரசு விடுதி காப்பாளர்கள் குமுறல்

கிடப்பில் போடப்பட்டதா தமிழக முதல்வரின் அறிவிப்பு: ஜி.ஓ., வெளியிட்டும் புதிய உணவு கட்டணம் கிடைக்கல... அரசு விடுதி காப்பாளர்கள் குமுறல்

கிடப்பில் போடப்பட்டதா தமிழக முதல்வரின் அறிவிப்பு: ஜி.ஓ., வெளியிட்டும் புதிய உணவு கட்டணம் கிடைக்கல... அரசு விடுதி காப்பாளர்கள் குமுறல்


UPDATED : ஜன 03, 2024 05:55 AM

ADDED : ஜன 02, 2024 05:57 AM

Google News

UPDATED : ஜன 03, 2024 05:55 AM ADDED : ஜன 02, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழக அரசு பள்ளி கல்லுாரி விடுதிகளுக்கு உணவு கட்டணம் உயர்த்தி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டும், அது தொடர்பாக அரசு உத்தரவு (ஜி.ஓ.,) வெளியாகியும் புதிய கட்டணம் இன்னும் வழங்கப்படவில்லை என காப்பாளர்கள் புலம்புகின்றனர்.

மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் ,மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர் நலத்துறைகளின் கீழ் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளி, கல்லுாரி விடுதிகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.பள்ளி மாணவருக்கு உணவுக் கட்டணம ஒருவருக்கு தலா ரூ. ஆயிரம், கல்லுாரி விடுதி மாணவர் ஒருவருக்கு தலா ரூ. 1,100 எனஇருந்த அரசு ஒதுக்கீட்டை 2023 அக்.,ல் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் பள்ளி விடுதி மாணவருக்கு ரூ தலா ரூ.1400, கல்லுாரி விடுதி மாணவருக்கு தலா ரூ.1500 என கட்டணத்தை உயர்த்தி வழங்கி அறிவித்தார்.இந்த அறிவிப்பு உடன் நடைமுறைக்கு வரும் என உறுதியளித்தார்.

ஆனால் முதல்வரின் இந்த அறிவிப்பு மூன்று மாதங்களுக்கு பின்பும் அறிவிப்பாகவே உள்ளது. இதுதொடர்பாக அரசு உத்தரவு வெளியிடப்பட்டாலும் பழைய உணவு கட்டணம் தான் விடுதிகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. இதனால் முதல்வர் அறிவிப்புஅதிகாரிகள் மெத்தன போக்கால் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி போல் 'அறிவிப்பாகவே' நீடிக்கிறது என விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து விடுதி காப்பாளர்கள் கூறியதாவது: 2022, ஜூன் முதல் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அரசு விடுதிகளில் புதிய உணவு வகையை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால் அதற்கு ஆகும் அதிக செலவினம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் காப்பாளர்கள் சொந்த பணத்தை செலவிட்டு அப்பணம் திரும்ப கிடைக்குமாஎன எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட உணவு கட்டணத்தையும் தராமல் அதிகாரிகள் மூன்று மாதங்களாக எங்களை இழுத்தடிக்கின்றனர். இதனால் மனஉளைச்சலில் தவிக்கிறோம். இதுதொடர்பாக வெளியான அரசுஉத்தரவில் 'புதிய கட்டணம் முறை இந்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை விரைவுபடுத்த முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us