/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீயணைப்பு நிலையம் ரூ.5.76 கோடியில் புதுப்பிப்பு
/
தீயணைப்பு நிலையம் ரூ.5.76 கோடியில் புதுப்பிப்பு
ADDED : செப் 19, 2025 02:35 AM

மதுரை: மதுரையின் முதல் தீயணைப்பு நிலையமான பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள நகர் நிலையம் ரூ.5.76 கோடியில் புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
இந்நிலையம் 1944ல் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட மதுரையின் முதல் தீயணைப்பு நிலையம். 'மதுரா பயர் ஸ்டேஷன்' என்று அழைக்கப்பட்ட இந்நிலையம் இன்னும் பழமை மாறாமல் ஓட்டு கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இடப்பற்றாக்குறையால் 3 வண்டிகள் மட்டுமே நிறுத்தும் வசதி உள்ளது. இங்கேயே தென்மண்டல துணை இயக்குநர் அலுவலகமும் உள்ளதால் இடநெருக்கடியில் தவித்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக ரூ.5.76 கோடியில் 4 பிரிவுகளுடன் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது.
துணை இயக்குநர் அலுவலகம் கே.கே.நகருக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. நகர் நிலையம் எல்லீஸ்நகருக்கு இடமாறுகிறது. கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் டெண்டர் விட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டதும் ஓரிரு மாதங்களில் கட்டுமான பணி துவங்கும்.