ADDED : செப் 10, 2025 08:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை பெருநகர் மேற்கு கோட்டம் நகர் வடக்குப் பிரிவு 028 வடக்கு விளாங்குடி, 029 பாரதியார் நகர், 030 சொக்கநாதபுரம், 031 கணபதி நகர், 033 ராமமூர்த்தி நகர் ஆகிய மின்பகிர்மான பகுதிகளை உள்ளடக்கிய மின்இணைப்புகள் அனைத்தும், இரட்டைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது.
தற்போது நிர்வாகக் காரணங்களால் செப்டம்பர் முதல் இனிவரும் காலங்களில் ஒற்றைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்படும் என, அரசரடி செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.