ADDED : செப் 10, 2025 08:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை யாதவர் கல்லுாரியின் அறிவியல் குழு சார்பில், 'மாணவர்களுக்கான நவீன கற்றல் கருவி' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. முதல்வர் ராஜு தலைமை வகித்தார்.
அறிவியல் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர்மாரியப்பன் வரவேற்றார்.
அமெரிக்கன் கல்லுாரிஉதவிப் பேராசிரியர்க.கண்ணன், அறிவியலின் கற்பித்தல்- கற்றல் முன்னுதாரணத்தை உயர்த்துவதில் டிஜிட்டல் தளங்கள் மற்றும் நவீன கற்றல் கருவிகளின் முக்கிய பங்கை பற்றி பேசினார்.
கல்லுாரி தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், பார்க் பிளாசா ஓட்டல் குழுமத்தின் தலைவர்கே.பி.எஸ்.கண்ணன், சுயநிதிப் படிப்புகள் இயக்குநர் ராஜகோபால் பங்கேற்றனர். உதவிப் பேராசிரியர் வினோபா நன்றி கூறினார்.