/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் தீபத்துாண் பிரச்னை: தி.மு.க., மீது ராமஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு
/
திருப்பரங்குன்றம் தீபத்துாண் பிரச்னை: தி.மு.க., மீது ராமஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் தீபத்துாண் பிரச்னை: தி.மு.க., மீது ராமஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் தீபத்துாண் பிரச்னை: தி.மு.க., மீது ராமஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு
ADDED : டிச 28, 2025 06:08 AM

உசிலம்பட்டி: 'திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தை நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்ற வேண்டும். 2 லிட்டர் எண்ணெய், ஒரு தீப்பெட்டியுடன் முடியும் விஷயத்தை தி.மு.க., மிகப்பெரிய செய்தியாக மாற்றியுள்ளது' என பா.ஜ., மாநில செயலாளர் ராமஸ்ரீனிவாசன் கூறினார்.
உசிலம்பட்டியில் கள்ளர் நாடு அறக்கட்டளை சார்பில் அரசு கள்ளர் பள்ளிகளில் பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற 30க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பா.ஜ., மாநில செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் விருது வழங்கினார்.
அவர் கூறியதாவது: 1920 ல் பெருங்காமநல்லுாரில் குற்றப்பரம்பரை என அறிவிக்கப்பட்ட பிரமலைக்கள்ளர் சமூகத்தினர் மீது ஆங்கில ஆட்சி துப்பாக்கிச்சூடு நடத்தியதுஇங்கிலாந்து பார்லிமென்டில் பேசுபொருளாக மாறியது. பிரமலைக்கள்ளர்களுக்கு குற்றப் பழங்குடியினராக சட்டம் போட்டு வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவு ஒடுக்கப்பட்ட காலத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தது. நீதிக்கட்சி இந்த மக்களுக்கு செய்தது துரோகம் மட்டுமே. இன்று 'சமூக நீதி பேசும் நீதிக்கட்சியின் வாரிசுகள்' என பெருமை கொள்ளும் ஸ்டாலின் இதற்கு விளக்கம் சொல்வாரா. இத்தனை லட்சம் மக்களுக்கு செய்த அநீதிக்கு என்ன பரிகாரம். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இல்லையென்றால் இந்த குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கியிருக்க முடியாது.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தை நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்ற வேண்டும். 2 லிட்டர் எண்ணெய், ஒரு தீப்பெட்டியுடன் முடியும் விஷயத்தை தி.மு.க., மிகப்பெரிய செய்தியாக மாற்றியுள்ளது. சர்வே துாண் என முதலில் சொன்னவர் கனிமொழி தான்.வாயை திறந்தாலே பொய் பேசும் தி.மு.க., செய்வதெல்லாம் ஹிந்துக்களுக்கு செய்யும் துரோகம், அநீதி. எல்லாத்தையும் ஏமாற்றும் ஒரு மாடல் பெயர் திராவிட மாடல். தேர்தலில் தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.

