/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்லுாரியில் ஓலைச்சுவடி பயிற்சி நிறைவு விழா
/
கல்லுாரியில் ஓலைச்சுவடி பயிற்சி நிறைவு விழா
ADDED : டிச 28, 2025 06:07 AM
மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரியில் தமிழ் உயராய்வு மையம் நடத்தும் ஓலைச்சுவடி பயிற்சிப்பட்டறையின் நிறைவு விழா நடந்தது.
தமிழ்த்துறைத் தலைவர் காந்திதுரை வரவேற்றார். முதல்வர் பாண்டியராஜா தலைமை வகித்து பேசுகையில், 'தமிழ்த்துறையில் உள்ள சொரூபானந்த உபநிடதம், மகா வாக்கிய தசகாரியம் சுவடிகளை பதிப்பிப்பதுடன், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இக்கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு பாடமாக வழங்கப்படும்.
இப்பருவத்தில் இருந்து கல்வெட்டு பயிற்சி இரண்டு பருவங்களிலும் நடத்தப்படும். மாணவர்கள் செயற்கை நுண்ணறிவுத்திறனை சரிவர பயன்படுத்துவது அவசியம்' என்றார்.
பின்னர் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். கேரள பல்கலை, மதுரைக் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் உதவிப்பேராசிரியர் முத்தமிழ் நன்றி கூறினார்.

