/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கரூரில் செப்.25ல் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் போலீசார் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

ADDED : செப் 20, 2025 05:38 AM
மதுரை: கரூரில் செப்.25 ல் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி எஸ்.பி.,யிடம் புதிதாக மனு அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கரூர் மாவட்ட அ.தி.மு.க., அவைத் தலைவர் திருவிகா தாக்கல் செய்த மனு: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பயண பொதுக்கூட்டம் செப்.25ல் கரூர்-கோவை ரோடு ஒரு சினிமா தியேட்டர் அருகே நடக்க உள்ளது. அனுமதி கோரி எஸ்.பி., டி.எஸ்.பி., கரூர் டவுன் இன்ஸ்பெக்டருக்கு மனு அனுப்பினோம். அனுமதியளிக்கவில்லை. அனுமதி, பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி சுந்தர் மோகன் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் செந்தில்குமரய்யா: ஏற்கனவே அதே இடத்தில் பிற கட்சிகளின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது. தற்போது அங்கு அனுமதியில்லை; மாற்று இடம் வழங்க பரிசீலிக்கத் தயார் என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். இது ஏற்புடையதல்ல என்றார்.நீதிபதி,'மனுதாரர் அனுமதி கோரி எஸ்.பி.,யிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அவர் செப்.22க்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.