முதல் படம் வெளியாகும் முன்பே கார் பரிசு
விக்ரம் பிரபு, எல்கே அக்ஷய்குமார், அனிஷ்மா, அனந்தா நடித்துள்ள 'சிறை' படம் இந்தவாரம் வெளியாகிறது. இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரிக்கு இது தான் முதல்படம். இப்படத்தை பலருக்கு போட்டு காண்பித்துள்ளார் தயாரிப்பாளர். அவர்கள் அனைவரும் பாராட்ட சுரேஷ் ராஜகுமாரிக்கு படம் வெளியாகும் முன் ஒரு காரை பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர் லலித் குமார். இந்த படத்தில் இவரின் மகன் எல்கே அக்ஷய்குமார் அறிமுகமாகிறார்.
நல்லது செய்ய அதிகாரம் தேவையில்லை
கன்னடத்தில் சிவராஜ்குமார், உபேந்திரா நடித்துள்ள 45 படம் தமிழிலும் வெளியாகிறது. சென்னை வந்த சிவராஜ்குமார் கூறுகையில், ''அரசியலுக்கு வந்து தான் நல்லது செய்ய வேண்டியதில்லை. நல்ல விஷயங்களை எங்கிருந்தும் பண்ணலாம். நல்லது செய்ய அதிகாரம் தேவையில்லை. மறைந்த தம்பி புனித் ராஜ்குமார், சின்ன வயதில் ஹீரோ ஆனான், விருதுகள் வாங்கினான், புகழ் அடைந்தான், சின்ன வயதிலேயே போய்விட்டான். என் அப்பா, அம்மாவுடன் அவன்தான் அதிகம் இருப்பான். அவன் தங்களுடன் இருக்க வேண்டும் என அவர்கள் அழைத்துக் கொண்டார்கள் என நினைக்கிறேன்'' என்கிறார்.

