ADDED : செப் 11, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : குருவித்துறை அருகே அய்யப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன் 32. நேற்று காரில் தேனியை நோக்கிச் சென்றார். உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி வாடிகருப்புகோயில் பகுதியில் நிலை தடுமாறி ரோட்டோரம் இருந்த பெரியகருப்பன் பெட்டி கடையில் கார் மோதியது. அடுத்ததாக பாண்டித்துரை வீட்டின் மீது மோதியது.
இதில் மாலைப்பட்டி கருப்பணன் 61, என்பவர் காயமுற்றார். உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.