ADDED : டிச 31, 2025 06:23 AM
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி நான்கு வழிச்சாலையின் ஒரு புறத்தில் வலைச்சேரி பட்டி, சொக்கம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களும் மறுபுறத்தில் கொட்டாம்பட்டியும் அமைந்துள்ளது. கிராம மக்கள் நான்குவழிச்சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அங்கு பாலம் அமைக்க கோரி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு நடந்த விபத்தில் இருவர் மரணம் அடையவே ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மாலை நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார், செந்தாமரை, டி.எஸ்.பி., சிவகுமார் இன்ஸ்பெக்டர் லோகநாதன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் ஜன. 6ல் கிராம மக்கள் கலெக்டரை சந்தித்து பாலம் கட்டுவது குறித்து பேசுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். பஸ் மறியலால் நான்கு வழிச்சாலையில் மூன்று மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

