/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா
/
சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா
ADDED : டிச 30, 2025 07:39 AM
திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் படித்து பல்வேறு துறையில் சாதனை படைத்துவரும் இளம் சாதனையாளர்கள் 6 பேருக்கு சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நடந்தது.
முதல்வர் அசோக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கூடுதல் விற்பனை வரி குறைதீர்க்கும் ஆணைய இணை கமிஷனர் ராஜி விருது வழங்கினார்.
முன்னாள் மாணவர்கள் கோகுல பிரசன்னாவிற்கு சிறந்த தொழில்நுட்பவியலாளர் விருதும், விஜய் ராஜாவிற்கு சிறந்த தொழிலகம் மற்றும் பெருநிறுவன தலைமை பண்பாளர் விருதும், சிரஜ்ஜவி பாலசுப்பிரமணியனுக்கு இந்திய பாதுகாப்பு படைத்துறை கப்பல் படை பிரிவில் சிறந்த பங்களிப்பிற்கான விருதும், அனஸ் மொகத்திற்கு சிறந்த சமூகப் பணியாளர் விருதும், சிவாவிற்கு சிறந்த கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் விருதும், பிரீத்திக்கு சிறந்த பொது நிர்வாகத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.

