/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போடி தொகுதியில் ஒரே வீட்டு எண்ணில் 93 வாக்காளர்கள்
/
போடி தொகுதியில் ஒரே வீட்டு எண்ணில் 93 வாக்காளர்கள்
போடி தொகுதியில் ஒரே வீட்டு எண்ணில் 93 வாக்காளர்கள்
போடி தொகுதியில் ஒரே வீட்டு எண்ணில் 93 வாக்காளர்கள்
ADDED : டிச 28, 2025 02:52 AM

தேனி: தேனி மாவட்டம், போடி சட்டசபை தொகுதியில் முந்தல் ஆதிதிராவிடர் காலனியில், ஒரே வீட்டு எண்ணில், 93 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் நவ., 4 முதல் டிச., 14 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடந்தது. வாக்காளர்களிடம் பெற்ற விபரங்கள் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. வரைவு வாக்காளர் பட்டியல் டிச., 19ல் வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில், 1.25 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
போடி தொகுதியில், சில பாகங்களில் ஒரே வீட்டு எண்ணில் பல வாக்காளர்கள் வசிப்பதாக வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.உதாரணமாக, முந்தல் ஆதிதிராவிடர் காலனி, 93 பேர், கொட்டக்குடி, குரங்கணியில் 87 பேர், பூதிப்புரம், கோட்டை மேட்டுத்தெருவில் 73 பேர் ஒரே வீட்டில் வசிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சில வீடுகளில், 14 முதல் 58 பேர் வரை வசிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து போடி சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் நல்லையாவிடம் கேட்ட போது, ''சரி பார்த்து வருகிறோம். கடந்த தேர்தலிலும் இவ்வாறே இடம் பெற்றுள்ளன,'' என்றார்.
தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இது தொடர்பாக தொகுதி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம்' என்றார்.

