/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எம் எஸ் சுப்புலட்சுமியின் 109 ஆவது ஜெயந்தி விழா
/
எம் எஸ் சுப்புலட்சுமியின் 109 ஆவது ஜெயந்தி விழா
ADDED : செப் 16, 2025 01:17 PM

மதுரை: மதுரை பிரபல கர்நாடக இசைக் கலைஞரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான கர்நாடக இசைக்கலைஞர் எம் எஸ் சுப்புலட்சுமியின் 109 ஆவது ஜெயந்தி விழா மதுரை எஸ் எஸ் காலனி ஸ்ரீ மஹா பெரியவா கோயிலில் நடைபெற்றது.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்.
மதுரை ராகப்பிரியா மியூசிக் சேம்பர் கிளப் செயலாளர் சி ஆர். ரவி தலைமை தாங்கினார். கர்நாடக இசைக் கலைஞர் முனைவர் ரெங்கநாயகி சச்சிதானந்தம் வயலின் இசை கலைஞர் சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் மதுரை சத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி முன்னாள் முதல்வர் மற்றும் மிருதங்க வித்வான் முனைவர் கே.தியாகராஜன் பாரத ரத்னா எம் எஸ் சுப்புலட்சுமியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பேசினார்.
இசை உலக ஜாம்பவான் எம்.எஸ்.,
அவர் மேலும் பேசியதாவது; நம் வாழ்கிற காலத்தில் இசை உலகத்தின் ஒரு மிகப்பெரிய ஜாம்பவானாக விளங்கியவர் எம் எஸ் சுப்புலட்சுமி. அவருக்கும் காஞ்சி மடத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு .காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் வேண்டுகோளுக்கிணங்க ஐ.நா. சபையில் நமது இந்தியாவின் பெருமையை உயர்த்துகிற விதமாக பாடல்களை பாடி சிறப்பு செய்தார்.
தினந்தோறும் நாம் காலையில் கேட்கிற வெங்கடேஸ்வர சுப்ரபாதம் முதல் பல்வேறு பாடல்களை பாடி ஆன்மிக உலகத்தின் முடிசூடா திலகமாக விளங்கியவர்.
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா என்ற பாடல் உலகம் முழுக்க இருக்கிற பக்தர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இன்றைக்கு இளம் இசை கலைஞர்கள் அவருடைய இசை வாழ்க்கையை முன் உதாரணமாகக் கொண்டு செயல்பட வேண்டும்.
முடிவில்முனிவர் ரங்கநாயகி சச்சிதானந்தம் எம் எஸ் சுப்புலட்சுமி பாடல்களை பாடினார். சச்சிதானந்தம் வயலின் முனிவர் தியாகராஜன் மிருதங்கம் வாசித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்