/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேன்கனிக்கோட்டையில் கிறிஸ்துமஸ் கீத பவனி
/
தேன்கனிக்கோட்டையில் கிறிஸ்துமஸ் கீத பவனி
ADDED : டிச 15, 2025 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டார போதகர்கள் ஐக்கியம் மற்றும் அகில இந்திய கிறிஸ்தவ திருச்சபை கூட்டமைப்பு சார்பில், ஒருங்கிணைந்த, 2ம் ஆண்டு கிறிஸ்-துமஸ் கீத பவனி தேன்கனிக்கோட்டையில் நேற்று மதியம் நடந்தது. பால்ரங்கநாதன் தலைமை வகித்தார்.
ஹோலிகிராஸ் பள்ளி அருகே துவங்கிய கீத பவனி, ராஜாஜி ரோடு, நேதாஜி ரோடு, பைபாஸ் சாலை, கோட்டை வாசல் வழியாக சென்று, தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது. போதகர்கள், தலைவர்கள், கிறிஸ்தவ மக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

