/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தளி தொகுதி பா.ஜ., நிர்வாகி மரணம் கொடியேற்றாமல் கோவை புறப்பட்ட அண்ணாமலை
/
தளி தொகுதி பா.ஜ., நிர்வாகி மரணம் கொடியேற்றாமல் கோவை புறப்பட்ட அண்ணாமலை
தளி தொகுதி பா.ஜ., நிர்வாகி மரணம் கொடியேற்றாமல் கோவை புறப்பட்ட அண்ணாமலை
தளி தொகுதி பா.ஜ., நிர்வாகி மரணம் கொடியேற்றாமல் கோவை புறப்பட்ட அண்ணாமலை
ADDED : டிச 21, 2024 03:00 AM
ஓசூர்: பா.ஜ., நிர்வாகி மரணமடைந்த நிலையில், ஓசூரில் நடக்க இருந்த கொடியேற்ற விழாவை ரத்து செய்து விட்டு, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கோவை புறப்பட்டு சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கசவுகட்டா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, மாணவ, மாணவிய-ருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன், ஓசூரில் உள்ள ராயக்கோட்டை சாலையில், அசோக் பில்லர் சர்க்கிள் பகு-தியில், பா.ஜ., கட்சி கொடியை அண்ணாமலை ஏற்றி வைக்க, மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்-யப்பட்டிருந்தன.
மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், வர்த்தக அணி மாநில துணைத்தலைவர் சுதா நாகராஜன், கோட்ட பொறுப்பாளர் பாலகி-ருஷ்ணன், தொழில்பிரிவு மாநில செயலாளர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் பிரவீன் உட்பட, 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், விழா திடலில் திரண்டிருந்தனர். காலை, 11:30 மணிக்கு கட்சி கொடியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், தனியார் பள்ளியில் நிகழ்ச்சி முடிய தாமதமானது. அதனால் கட்சி நிர்வாகிகள் மதியம், 2:30 மணி வரை காத்திருந்-தனர்.
அதற்குள், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த, பா.ஜ., கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினரும், தளி சட்டசபை தொகு-தியில் போட்டியிட்டவருமான ராமச்சந்திரன்,58, உயிரிழந்த தகவல் வெளியானது. அதனால் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு, அடுத்த, 15 நாட்களுக்குள் மீண்டும் வந்து கட்சி கொடியை ஏற்றி வைப்பதாக கூறி, கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, அண்ணாமலை புறப்பட்டு சென்றார்.

